10 நிமிடத்தில் உடனடி ரிட்டர்ன் – எக்சேஞ்ச் வசதி - Zepto அறிவிப்பு!
இந்த சேவை மின்னணு பொருட்கள், பொம்மைகள், விளையாட்டு மற்றும் சமையலறை பொருட்களுக்கு பொருந்தும்.
விரைவு காமர்ஸ் யூனிகார்ன் நிறுவனம் Zepto, குறிப்பிட்ட பிரிவுகளில் உடனடி எக்சேஞ்ச் மற்றும் ரிட்டர்ன் வசதியை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. நிறுவனத்தின் லிங்க்டு இன் பதிவில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவை, மின்னணு சாதனங்கள், ஆடைகள், பொம்மைகள், விளையாட்டு மற்றும் சமலையறை பொருட்கள் ஆகிய பிரிவுகளுக்கு பொருந்தும். பிரிவின் வகைகளுக்கு ஏற்ப, வாடிக்கையாளர்கள், ஒரு நாள், மூன்று மற்றும் ஏழு நாட்களில் பொருட்களை திரும்பி அனுப்ப அல்லது எக்சேஞ்ச் செய்து கொள்ளலாம்.
இதற்கு முன், ஜொமேட்டோ நிறுவனத்தின் பிளின்கிட் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், 10 நிமிட எக்சேஞ்ச் மற்றும் ரிட்டர்ன் வசதியை அறிமுகம் செய்தது. இந்த சேவை, தில்லி- என்சி.ஆர்,மும்பை, பெங்களூரு, ஐதரபாத், புனா உள்ளிட்ட நகரங்களில் அமலில் உள்ளது. மேலும் நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
பொருட்களை திரும்பி அனுப்புவது உள்ளிட்ட ரிவர்ஸ் லாஜிஸ்டிக்ஸ், இ-காமர்ஸ் நிறுவனங்களால் திறம்பட செயல்படுத்தப்படும் நிலையில், விரைவு காமர்ஸ் நிறுவனங்கள் இந்த வசதியை பரிசோதனை முறையில் அமல் செய்து பார்க்கின்றனர்.
வேகமான டெலிவரி நேரம் காரணமாக, விரைவு காமர்ஸ் நிறுவனங்கள் அதிக அளவில் ரிட்டர்ன்களை (return to origin) கையாள வேண்டியிருப்பதில்லை. வாடிக்கையாளர்கள் வீட்டில் இல்லாத போது பெரும்பாலும் நிகழும் ரிட்டர்ன்கள், ரிவர்ஸ் ஷிப்பிங் செலவை அதிகமாக்குகிறது.
தற்போது விரைவு காமர்ஸ் நிறுவனங்கள் வழக்கமான மளிகை, இல்ல பொருட்கள் ஆகியவற்றில் இருந்து மற்ற பொருட்களையும் கையாளத்துவங்கியிருப்பதால் இந்த வசதி தேவைப்படுகிறது. ஐபோன், ஆடைகள் உள்ளிட்டவற்றை இந்நிறுவனங்கள் கையாளத்துவங்கியுள்ளன.
Edited by Induja Raghunathan