மின்வாகன விற்பனை சரிவு எதிரொலி - ஓலா எலெக்ட்ரிக் பங்குகள் 5% பின்னடைவு!
அக்டோபரில் 41,775 ஓலா வாகனங்களாக இருந்த விற்பனை நவம்பரில் 29,196-ஆகக் குறைந்தது.
பாவிஷ் அகர்வால் தலைமையிலான ஓலா எலக்ட்ரிக் பங்குகள் திங்களன்று ஆரம்ப வர்த்தகத்தில் 5% சரிந்தன. ஓலா எலெக்ட்ரிக் மின் வாகனங்களின் விற்பனை நவம்பரில் 30% சரிவைக் கண்டதையடுத்து பங்குச் சந்தையில் பங்குகள் விலை பின்னடைவு கண்டுள்ளன.
அக்டோபரில் 41,775 வாகனங்களாக இருந்த விற்பனை நவம்பரில் 29,196-ஆகக் குறைந்தது. இதன் விளைவாக, அதன் சந்தைப் பங்கு 24.7% ஆக குறைந்தது. இந்நிறுவனம் இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட ஆகஸ்ட் மாதத்தில் அதன் சந்தைப் பங்கான 31.2% இல் இருந்து இது குறிப்பிடத்தக்க சரிவாகும்.
கூடுதலாக, இந்நிறுவனம் ஏப்ரல் மாதத்தில் சந்தையில் 53.6% வலுவான கோட்டையாக இருந்தபோது இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அதன் சந்தைப் பங்கு சரிவைக் கண்டது. சந்தையில் வலுவாக இருந்த இந்தக் காலக்கட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட மின்சார இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை 118,924 யூனிட்களைத் தொட்டது, இது முந்தைய ஆண்டை விட 29% அதிகமாகும்.
அதன் குறைந்து வரும் சந்தைப் பங்கிற்கு மத்தியில், ஓலா எலக்ட்ரிக் நவம்பர் 26 அன்று, மின்சார ஸ்கூட்டர்களின் வளர்ந்து வரும் பயன்பாட்டைப் பிடிக்கும் முயற்சியில், ஏப்ரல் 2025 இல் தொடங்கும் டெலிவரிகளுடன் அதன் S1Z மற்றும் Gig வகையறாஎலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியதாகக் கூறியது.
இருப்பினும், IPO-க்கு உட்பட்ட ஏதர் எனர்ஜி, டிவிஎஸ் மோட்டார் மற்றும் பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட போட்டியாளர்கள் முறையே 11%, 23% மற்றும் 22% சந்தைப் பங்கைக் கைப்பற்றினர்.
இருசக்கர வாகனங்களின் விற்பனைக்குப் பிந்தைய பழுது உள்ளிட்ட சர்வீஸ் என்ற சேவைகளில் குறைபாடு இருப்பதாக வாடிக்கையாளர்களிடமிருந்து புகார்கள் அதிகரித்தன. மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் புகார்கள் மீதான விசாரணையை மேற்கொண்டுள்ளது, அதாவது,
தங்களிடம் 10,644 புகார்கள் வந்ததாகவும் இதில் 99% புகார்களை சரி செய்ததாகவு ஓலா மேற்கொண்ட கோரல்களின் மீதான விசாரணையை இந்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் மேற்கொண்டு வரும் நிலையில் இந்த விற்பனைச் சரிவு எண்ணிக்கை வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது
ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் 450-500 ஊழியர்களின் பணிப்பாதுகாப்பைப் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் மறுசீரமைப்புப் பயிற்சியை மேற்கொண்டுள்ளது என்று யுவர்ஸ்டோரி ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜூலை-செப்டம்பர் காலாண்டில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ரூ.495 கோடி நிகர இழப்பை சந்தித்துள்ளது, இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ.524 கோடியாக இருந்தது. இருப்பினும், காலாண்டு அடிப்படையில், ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் இழப்பு ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.324 கோடியாக அதிகரித்துள்ளது.
தமிழில்: முத்துகுமார்