Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

ரூ.50 கோடி முதல் நிதி நிறைவை அறிவித்தது சென்னை விசி ஃபண்ட் நிறுவனம் Peaceful Progress Fund!

ஆரம்ப நிலை ஏஞ்சல் முதலீட்டு நிறுவனம் 'பீஸ்புல் பிராக்ரஸ் ஃபண்ட்' தனது முதல் நிதியான ரூ.50 கோடியை, 22 ஸ்டார்ட் அப்'களில் முதலீடு செய்து நிறைவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

ரூ.50 கோடி முதல் நிதி நிறைவை அறிவித்தது சென்னை விசி ஃபண்ட் நிறுவனம் Peaceful Progress Fund!

Wednesday January 29, 2025 , 2 min Read

ஆரம்ப நிலை ஏஞ்சல் முதலீட்டு நிறுவனம் 'பீஸ்புல் பிராக்ரஸ் ஃபண்ட்', தனது ரூ.50 கோடி முதல் நிதியில், இறுதி முதலீட்டாளர்கள் முதலீடு நிறைவு பெற்றதாக அறிவித்துள்ளது.

சென்னையை தலைமையகமாகக் கொண்ட, செபியில் பதிவு செய்த CAT-I மாற்று முதலீடு நிதியான பீஸ்புல் பிராக்ரஸ் பண்ட் (Peaceful Progress Fund), தொழில்நுட்பம் சார்ந்த, நுகர்வோர் பொருட்கள் மற்றும் பயணிகள் போக்குவரத்து பிரிவுகளில் ஆரம்ப நிலை வர்த்தகங்களில் இணை முதலீடு செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது.

fund

தொழில்நுட்பப் பிரிவில், ஏஐ. எம்.எல், ஐஓடி, விஆர் உள்ளிட்ட துறைகளிலும், தொழில்நுட்பம் அல்லாத பிரிவில், நுகர்வோர் ஸ்டார்ட் அப், பயணிகள் போக்குவரத்து, ட்ரோன், விண்வெளி நுட்பம் ஆகிய துறைகளில் கவனம் செலுத்துகிறது.

இதுவரை, பல மாறுபட்ட துறைகளில் 22 ஸ்டார்ட் அப்'களில் முதலீடு செய்துள்ளது. ஜைப் எலெக்ட்ரிக், பாம்பே ஷேவிங் கம்பெனி, கருடா ஏரோஸ்பேஸ், லைகர் மொபிலிட்டி, ரிவேம்ப் மோட்டோ, லிசுன், டெஸால், கார்கோ எப்.எல் உள்ளிட்ட நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது.

இந்த நிதியின் ஜெனரல் பார்ட்னர்களாக, ஸ்ரீனிவாசன் அருணாச்சலம், கமல் அகர்வால், சீதாராமன் பார்த்தசாரதி, சந்திரசேகர் குப்பேரி ஆகியோர் உள்ளனர். மேலும், கோவிந்தராஜன் ஸ்ரீனிவாசன், விஸ்வந்தா கணபதி வென்சர் பார்ட்னர்களாக உள்ளனர்.

இந்நிலையில், இந்த நிதி தனது முதல் நிதி நிறைவை அறிவித்துள்ளது.

"பீஸ்புல் பிராக்ரஸ் ஃபண்டின் முதல் நிதி வெற்றிகரமாக நிறைவு ஆகியுள்ளது எங்களுக்கு முக்கிய மைல்கல். தொழில்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஸ்டார்ட் அப்'களை ஆதரிக்கும் எங்கள் ஈடுபாட்டை இது உறுதி செய்கிறது. எங்களுடைய தீவிர பரிசீலனை முறை மற்றும் வல்லுனர் சார்ந்த அணுகுகிற ஒவ்வொரு முதலீடும் நீடித்த, புதுமையான தீர்வை வழங்குவதை உறுதி செய்கிறது,” என முதலீடு நிறைவு தொடர்பான செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Peaceful progress fund

இந்த நிதி முதலீட்டாளர் நட்பான அமைப்பை கொண்டிருக்கிறது. தனிநபர்கள் இடர் மற்றும் முதலீடு இலக்கிற்கு ஏற்ற ஸ்டார்ட் அப்'களை தேர்வு செய்து முதலீடு செய்ய வழி செய்கிறது. இந்த அணுகுமுறை முதலீட்டாளர்களுக்கு உதவுகிறது.

புதுமையாக்கத்தில் கவனம் செலுத்தி தொடர்ந்து சிறப்பான முறையில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் மேலும் 25க்கும் அதிகமான ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்ய உள்ளது.


Edited by Induja Raghunathan