Stock News: இந்தியப் பங்குச் சந்தையில் எழுச்சிக்குப் பின் வீழ்ச்சி - காரணம் என்ன?
வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வெளியேற்றம் நீடிப்பதன் எதிரொலியாக, இந்தியப் பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி தொடர்ந்து வருகிறது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் கடும் சரிவை எதிர்கொண்டு வருகின்றன.
வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வெளியேற்றம் நீடிப்பதன் எதிரொலியாக, இந்தியப் பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி தொடர்ந்து வருகிறது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் கடும் சரிவை எதிர்கொண்டு வருகின்றன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (மார்ச் 3) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 451.62 புள்ளிகள் உயர்ந்து 73,649.72 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 136.85 புள்ளிகள் உயர்ந்து 22,261.55 ஆக இருந்தது.
வர்த்தக தொடக்கத்தில் ஏற்றம் நிலவினாலும், சில நிமிடங்களிலேயே மீண்டும் வீழ்ச்சியை நோக்கி நகர்ந்தது முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று முற்பகல் 11.15 மணியளவில் சென்செக்ஸ் 972.40 356.52 (0.49%) சரிந்து 72,841.58 ஆகவும், 95.10 புள்ளிகள் (0.43%) சரிந்து 22,029.60 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை வர்த்தகம் ஏற்றதுடன் நிறைவு பெற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் சந்தைகளில் உயர்வு நிலவுகிறது. சியோல் பங்குச் சந்தைக்கு இன்று விடுமுறை. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தின் வரிவிதிப்பு உள்ளிட்ட பொருளாதாரக் கொள்கைகள் தொடர்ந்து பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியப் பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில், பல்வேறு அச்சங்களின் காரணமாக, மும்பை பங்குச் சந்தை முதலீட்டில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கொத்துக் கொத்தாக வெளியேறி வருகின்றனர். இதன் காரணமாக, தொடர்ந்து சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் விழிச்சி கண்டு வருகின்றனர்.
ஏற்றம் காணும் பங்குகள்:
விப்ரோ
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
இன்ஃபோசிஸ்
எம் அண்ட் எம்
பாரதி ஏர்டெல்
ஐசிஐசிஐ பேங்க்
ஐடிசி
டெக் மஹிந்திரா
டைடன் கம்பெனி
டிசிஎஸ்
கோடக் மஹிந்திரா பேங்க்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
என்டிபிசி
பஜாஜ் ஃபைனான்ஸ்
எஸ்பிஐ
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
டாடா மோட்டார்ஸ்
நெஸ்லே இந்தியா
ஆக்சிஸ் பேங்க்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
டாடா ஸ்டீல்
ஏசியன் பெயின்ட்ஸ்
பாஜாஜ் ஃபின்சர்வ்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 பைசா உயர்ந்து ரூ.87.28 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan