Stock News: சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்வு - அனைத்துத் துறை பங்குகளும் முன்னிலை!
நிப்டி பேங்க் குறியீடு 185 புள்ளிகள், நிப்டி ஐடி குறியீடு 90 புள்ளிகள் உயர்ந்து காணப்பட மும்பைப் பங்குச் சந்தையின் ஸ்மால் கேப் குறியீடு 153 புள்ளிகள் ஏற்றம் கண்டுள்ளன.
மும்பைப் பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வெள்ளிக்கிழமையான இன்று (30-08-2024) ஏற்றம் கண்டுள்ளன. மும்பைப் பங்குச்சந்தையின் பிரதான சென்செக்ஸ் குறியீடு தொடக்கத்தில் 200 புள்ளிகள் வரை உயர்ந்தது.
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சற்று முன் நிலவரப்படி, 203.72 புள்ளிகள் உயர்ந்து 82,338.33 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 70 புள்ளிகள் உயர்ந்து 25,221.85 புள்ளிகளாகவும் உள்ளன.
நிப்டி பேங்க் குறியீடு 185 புள்ளிகள், நிப்டி ஐடி குறியீடு 90 புள்ளிகள் உயர்ந்து காணப்பட மும்பைப் பங்குச் சந்தையின் ஸ்மால் கேப் குறியீடு 153 புள்ளிகள் ஏற்றம் கண்டுள்ளன.
காரணம்:
நாட்டின் முதலாம் காலாண்டு ஜிடிபி முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில் எதிர்பார்ப்பில் முதலீடுகள் பங்குச் சந்தையில் சற்றே அதிகரித்துள்ளன.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
பஜாஜ் பைனான்ஸ்
பஜாஜ் ஃபின் சர்வீஸ்
எல் அண்ட் டி
கோல் இந்தியா
ஹெச்.டி.எஃப்.சி. வங்கி
இறக்கம் கண்ட பங்குகள்:
டாடா மோட்டார்ஸ்
டிசிஎஸ்
பஜாஜ் ஆட்டோ
சன் பார்மா
ஹெச்.டி.எஃப்.சி.லைஃப்
இந்திய ரூபாயின் மதிப்பு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்றே கூடி டாலர் ஒன்றுக்கு இன்று ரூ.83.84 ஆக உள்ளது.