Stock News: பங்குச்சந்தையில் அதிர்ச்சி; சென்செக்ஸ் 1000+ புள்ளிகள் சரிவு - அனைத்துக் குறியீடுகளும் ‘ரெட்’
பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை நிலவரப்படி, 1085 புள்ளிகள் சரிந்து 80,204.95 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு 328.75 புள்ளிகள் சரிந்து 24,219.95 புள்ளிகளாகவும் உள்ளன.
இந்திய பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வெள்ளிக்கிழமையான இன்று (13-12-2024) கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன. சென்செக்ஸ் தொடக்க நிலவரங்களின் படி, 1,150 புள்ளிகள் சரிந்து அதிர்ச்சித் தொடக்கம் கண்டது. நிப்டி 300 புள்ளிகளுக்கும் மேல் சரிந்துள்ளது.
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 10:35 மணி நிலவரப்படி, 1085 புள்ளிகள் சரிந்து 80,204.95 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு 328.75 புள்ளிகள் சரிந்து 24,219.95 புள்ளிகளாகவும் உள்ளன.
நிப்டி பேங்க் குறியீடு இன்று ஒரே அமர்வில் 859 புள்ளிகள் சரிய நிப்டி ஐடி குறியீடு 554 புள்ளிகளும் பிஎஸ்இ ஸ்மால் கேப் 1,046 புள்ளிகளும் சரிவு கண்டன. ஐடி பங்குகள் ஏற்றம் காண பொதுத்துறை வங்கிப்பங்குகள் பின்னடைவு கண்டுள்ளன. மெட்டல்ஸ் துறை பங்குகள் பெரிய அளவில் அடி வாங்கியுள்ளன.
காரணம்:
அமெரிக்க டாலர் மதிப்பு வலுவாக இருப்பதால் மெட்டல் துறைப் பங்குகள் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. மேலும் சீனாவின் பொருளாதாரத் திட்டங்கள் குறித்து முதலீட்டாளர்கள் காத்திருக்கின்றனர். மேலும் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் அதாவது FII முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று முதலீடுகளை திரும்பப் பெற்று வருவதால் இன்றைய சரிவு ஏற்பட்டுள்ளது.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
ஹிந்துஸ்தான் ஏரோன்
சொமேட்டோ
பார்தி ஏர்டெல்
மாக்ஸ் ஹெல்த் கேர்
இறக்கம் கண்ட பங்குகள்:
ஸ்ரீராம் பைனானஸ்
பிஎன்பி
பேங்க் ஆஃப் பரோடா
அவென்யூ சூப்பர் மார்க்கெட்
அதானி போர்ட்ஸ்
இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று டாலர் ஒன்றுக்கு இன்று ரூ.84.87ஆக உள்ளது.