உள்நாட்டு பரஸ்பர நிதியங்களிடமிருந்து QIP மூலம் 1 பில்லியன் டாலர் முதலீடு திரட்டிய Zomato
Zomato-இன் நிதி திரட்டல் அதன் மூலதன அட்டவணையில் மாற்றத்தைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு மேலும் உரிமையை வழங்கும்.
Zomato தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கென்றே பிரத்யேகப் பங்கு வெளியீட்டின் மூலம் 1 பில்லியன் டாலர்கள் முதலீடு திரட்டியுள்ளது. 2021-ம் ஆண்டின் அதன் முதல் ஐபிஓவு-க்குப் பிறகே இது ஒரு பெரிய நிதி திரட்டலாகும்.
தீபிந்தர் கோயலின் Zomato வெள்ளிக்கிழமை தனது QIP-யில் சுமார் 21% பணத்தை மோதிலால் ஆஸ்வாலின் மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு ஒதுக்கியது. மோதிலால் ஆஸ்வால் இதற்கு முன்னர் துரிய வணிக நிறுவனமான செப்டோவுக்கு நிதி திரட்டலைத் தலைமை தாங்கி நடத்தியதையடுத்து இப்போது சொமேட்டோவும் இவர்களிடத்தில் நிதி திரட்டலை திட்டமிட்டது.
ரூ.8,500 கோடி அல்லது கிட்டத்தட்ட $1 பில்லியன் திரட்டுவதற்காக, ஒவ்வொன்றும் ரூ.252.62 என்ற விலையில், 33.64 கோடி ஈக்விட்டி பங்குகளை வழங்குவதற்கும் ஒதுக்குவதற்கும் Zomato ஒப்புதல் அளித்துள்ளது.
ஐசிஐசிஐ மியூச்சுவல் ஃபண்டிற்கு அதன் பல்வேறு நிதியம் மூலம், 4.25 கோடி பங்குகள் ஒதுக்கப்பட்டது, இது வெளியீட்டில் 12.78% ஆகும். ஹெச்டிஎஃப்சி உட்பட உள்நாட்டு பரஸ்பர நிதிகளுக்கு 1.97 கோடி ஒதுக்கப்பட்டது, இது QIP-இல் 5.95% ஆகும். கோட்டக்க்கிற்கு 6% ஒதுக்கப்பட்டது.
இந்த வெளியீடு நவம்பர் 25 அன்று திறக்கப்பட்டு நவம்பர் 28 அன்று நிறைவடைந்தது. குருகிராமை தலைனைத் தளமாகக் கொண்ட Zomato-இன் நிதி திரட்டல் அதன் மூலதன அட்டவணையில் மாற்றத்தைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு மேலும் உரிமையை வழங்கும்.
இந்த தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கான பிரத்யேக பங்கு வெளியீடு என்பது ஜோமாட்டோ நிறுவனம் துரித வணிகத் துறையில் கொடி நாட்டி வரும் அமேசான், ஃபிளிப்கார்ட் ஆகியவற்றிடமிருந்து கடும் போட்டிகளை எதிர்கொண்டு வரும் சமயத்தில் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செப்டோ நிறுவனம் கடந்த 6 மாதங்களில் 1.35 பில்லியன் டாலர்கள் முதலீடு திரட்டியது. அதன் சமீபத்திய சுற்றில் $350 மில்லியன் இந்திய HNI கள் மற்றும் குடும்ப அலுவலகங்களின் முதலீட்டுடன் மோதிலால் ஓஸ்வால் தனியார் முதலீட்டாலும் திரட்டப்பட்டது.
பெருநிறுவன முதலீட்டாளர்களுக்குப் பங்கு விலையை ரூ.265.91 ஆக நிர்ணயித்த Zomato