Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

காலை உணவை எளிதாக்க 'உடனடி சாம்பார்' அறிமுகம் செய்தது idfresh!

உணவு பிராண்டான ஐடி பிரெஷ், உடனடியாக சூடாக்கி சாப்பிடும் பிரிவில் வீடுகளில் செய்வது போன்ற சுவை கொண்ட உடனடி சாம்பார் ரகத்தை அறிமுகம் செய்துள்ளது.

காலை உணவை எளிதாக்க 'உடனடி சாம்பார்' அறிமுகம் செய்தது idfresh!

Wednesday March 05, 2025 , 2 min Read

உடனடி உணவு பிராண்டான ஐடி பிரெஷ், உடனடியாக சூடாக்கி சாப்பிடும் பிரிவில் இல்லத்தில் செய்வது போன்ற சுவை கொண்ட உடனடி சாம்பார் ரகத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த அறிமுகத்தின் மூலம் தனது காலை உணவு ரகங்களை விரிவாக்கி, நவீன வாடிக்கையாளர்கள் நாடும் அனைத்து வீட்டு சுவை பொருட்களையும் வழங்க திட்டமிட்டுள்ளது.

id

வேகமாக வளர்ந்து வரும் உடனடியாக சூடாக்கி சாப்பிடும் உணவுப் பிரிவு 2025ல் 1.29 பில்லியன் டாலர் மதிப்பை அடைந்து 2029 வரை 13.41 சதவீத வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனி குடும்பங்கள் மற்றும் இரு ஊதிய குடும்பங்கள் அதிகரித்து வரும் நிலையில், தரம் வாய்ந்த வசதி மிக்க உணவு வாய்ப்புகளுக்கான தேவை அதிகரிக்கிறது. ஐடி பிரெஷ் நிறுவனம் பாரம்பரிய சுவையுடன் நவீன நுட்பம் சார்ந்த புதுமையாக்கத்தை இணைப்பதன் மூலம் இந்த தேவையை நிறைவேற்ற முற்படுகிறது.

“இந்திய வாடிக்கையாளர்களுக்கு முழுமையான, வசதியான சுவைமிகு உணவை வழங்குவதில் தொடர்ந்து புதுமையாக்கத்திற்கு முயன்று வருகிறோம். எங்கள் உடனடி சாம்பார், முழுமையான காலை உணவு அனுபவம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது,” என்று ஐடி பிரெஷ் புட் (இந்தியா) சி.இ.ஓ.ரஜத் திவாகர் கூறினார்.

ஐடி பிரெஷ் உடனடி சாம்பார் தயாரிக்க, மேம்பட்ட தர்மிசேஷன் நுட்பத்தை சூடாக்க பயன்படுத்துகிறது. இதில் பதப்படுத்துவதற்கான பொருட்கள், செயற்கை சுவைகள் சேர்க்கப்படவில்லை. நிமிடங்களில் தயார் செய்யக்கூடிய வகையில் அமைந்துள்ளது, என நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐடியின் பிரபலமான இட்லி- தோசை மாவு, பரோட்டா, சட்னி ஆகியவற்றுடன் உடனடி சாம்பார் இணைந்து காலை உணவை முழுமையாக்குகிறது.

“தரம் மற்றும் புதிதான தன்மை கொண்ட பொருட்களை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள். வாடிக்கையாளர்களுக்கு வீட்டு சுவை கொண்ட பாரம்பரிய சாம்பாரை அளிக்க மிக கவனமாக மூலப்பொருட்களை தேர்வு செய்துள்ளோம்,” என நிறுவன புதிய பொருட்கள் பிரிவு தலைவர் இனாக்‌ஷி தாஸ்குப்தா கூறியுள்ளார்.

பெங்களூர், சென்னை, ஐதராபாத், மும்பை, புனே மற்றும் தில்லியில் அனைத்து இ-காமர்ஸ் மேடைகளிலும் இது கிடைக்கிறது. கடைகளில் அறிமுகம் பெங்களூரு, மும்பை மற்றும் புனேவில் இந்த மாதம் இடையில் நிகழும் என நிறுவனம் தெரிவிக்கிறது.


Edited by Induja Raghunathan