Stock News: சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வுடன் தொடக்கம் - ஸ்மால் கேப் கடும் சரிவு!
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 10:10 மணி நிலவரப்படி 175.18புள்ளிகள் உயர்ந்து 81,864 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 26 புள்ளிகள் உயர்ந்து 25,040.50 புள்ளிகளாகவும் உள்ளன.
இந்திய பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் திங்கட்கிழமையான இன்று (07-10-2024) 400 புள்ளிகள் தொடக்க நிலவரப்படி, முன்னேற்றம் கண்டுள்ளன. மும்பைப் பங்குச்சந்தையின் பிரதான சென்செக்ஸ் குறியீடு தொடக்கத்தில் 400 புள்ளிகள் வரை உயர்ந்தது.
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 10:10 மணி நிலவரப்படி 175.18புள்ளிகள் உயர்ந்து 81,864 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 26 புள்ளிகள் உயர்ந்து 25,040.50 புள்ளிகளாகவும் உள்ளன.
நிப்ட் பேங்க் குறியீடு இன்று சற்றே உயர்ந்து வருகின்றன. தேசியப் பங்குச் சந்தையின் ஐடி குறியீடு 312 புள்ளிகள் உயர்ந்து 42,224.60 புள்ளிகளாக உள்ளது. என்றும் இல்லாமல் இன்று மும்பைப் பங்குச் சந்தையின் ஸ்மால் கேப் குறியீடு சற்று முன் நிலவரப்படி, 1006 புள்ளிகள் சரிவு கண்டு 54,938 புள்ளிகளாக உள்ளன.
காரணம்:
இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் அதிகரித்திருப்பதால் கச்சா எண்ணெய் விலை உள்ளிட்ட சிக்கல்களினால் பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கங்கள் கணிக்க முடியாமல் உள்ளது, இன்றைய சரிவுக்கு பிஎஸ்இ ஸ்மால் கேப் பெரிய அளவில் சரிவு கண்டதே காரணம்.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
ஐடிசி
ஐசிஐசிஐ வங்கி
கோடக் மகீந்திரா பேங்க்
இன்போசிஸ்
சிப்ளா
இறக்கம் கண்ட பங்குகள்:
டைட்டன் கம்பெனி
பாரத் எலெக்ட்ரானிக்ஸ்
அதானி போர்ட்ஸ்
ஓ.என்.ஜி.சி.
கோல் இந்தியா
இந்திய ரூபாயின் மதிப்பு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு கண்டு டாலர் ஒன்றுக்கு இன்று ரூ.84.39 ஆக உள்ளது.