Stock News: படுத்தது பங்குச் சந்தை - சென்செக்ஸ் 800+ புள்ளிகள் வீழ்ச்சி!
சர்வதேச வர்த்தக நிலவரத்தின் எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி நிலவி வருகிறது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் பெரும் சரிவை சந்தித்துள்ளன.
சர்வதேச வர்த்தக நிலவரத்தின் எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி நிலவி வருகிறது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் பெரும் சரிவை சந்தித்துள்ளன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (செப்.6) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 233.98 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 81,967.18 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 60 புள்ளிகள் சரிந்து 25,085.10 ஆக இருந்தது.
பங்கு வர்த்தகம் இன்று காலை தொடங்கியதில் இருந்தே ‘ரெட்’ அலர்ட் உடன் நீடிப்பது முதலீட்டாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்தப் போக்கு நீடிக்கும் பட்சத்தில், பெரும் இழப்பு ஏற்படலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.
முற்பகல் 11.50 மணியளவில் சென்செக்ஸ் 804.66 புள்ளிகள் (0.98%) வீழ்ச்சியுடன் 81,396.50 ஆக இருந்தது. அப்போது, நிஃப்டி 222.30 புள்ளிகள் (0.88%) சரிந்து 24,922.80 ஆக இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை வர்த்தகம் நிறைவடையும்போது மிகவும் பாதகமான போக்குடனேயே காணப்பட்டது. தற்போது ஆசிய பங்குச் சந்தைகளான சியோல், ஷாங்காய், டோக்கியோ மற்றும் ஹாங்காங் என அங்கிங்கெனாதபடி எங்கும் வீழ்ச்சியே நிலவுகிறது. இவ்வாறாக, சர்வதேச பங்கு வர்த்தகப் போக்கின் எதிரொலியால் இந்திய பங்குச் சந்தைகளும் கடும் வீழ்ச்சி கண்டு வருகிறது. அதேவேளையில், இந்திய பங்குச் சந்தைகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் காட்டும் ஆர்வமும் சற்றே குறைந்துள்ளதும் இந்தச் சரிவுக்கு காரணம்.
ஏற்றம் காணும் பங்குகள்:
பஜாஜ் ஃபைனான்ஸ்
பஜாஜ் ஃபின்சர்வ்
ஹிந்துஸ்தான் யூனிலீவர்
ஆசியன் பெயின்ட்ஸ்
இண்டஸ்இண்ட் பேங்க்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
அல்ட்ராடெக் சிமென்ட்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
என்டிபிசி
ஐசிஐசிஐ பேங்க்
டைட்டன்
இந்திய ரூபாய் மதிப்பு
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 பைசா உயர்ந்து டாலர் ஒன்றுக்கு இன்று ரூ.83.95 ஆக உள்ளது.
Edited by Induja Raghunathan